AUDIO: புத்தளம் பாடசாலை விவகாரம்; செய்தி முற்றிலும் போலியானது! அறிக்கை வெளியிட்டமைக்கு நன்றி! -புத்தளம் ஷாதின்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

AUDIO: புத்தளம் பாடசாலை விவகாரம்; செய்தி முற்றிலும் போலியானது! அறிக்கை வெளியிட்டமைக்கு நன்றி! -புத்தளம் ஷாதின்


அஸ்ஸலாமு அலைக்கும்,


நான் புத்தளம் ஷாதீன். 


முதல் கண் யாழ் நியூஸ் ஊடக பிரிவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எங்கள் உண்மை நிலையை மக்கள் மத்தியில் கொண்டு வந்தமைக்கு!


கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் யாழ் நியூஸ் மூலமாக வெளியிட்ட எமது ஊர் பாடசாலை சார்ந்த ஒரு செய்தியினை முற்றிலும் போலியானது என்று ஒரு அறிக்கை கண்ணுற்றேன். "Totally Fake News" என்று இருந்தது. இதை முகநூலில் பதிவிட்ட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு (SDS) கோடி நன்றிகள். 


ஆகவே, 


$ads={2}

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் கடந்த 07/12/2020 அன்று இடம்பெற்ற பெற்றோர் கூட்டத்தின் போது, உங்களால் BOC வங்கியின் பணைவைப்பு ஸ்லிப் கொடுக்கப்படவில்லை?


பெற்றோர்களின் கையில் 26/12/2020 ஆம் திகதிக்கு முன் வங்கியில் குறைந்தது எங்கள் கணக்கு ரூ. 7,000 என்று SDS Sir கூறவில்லை? 


மேற்குறிப்பிட்ட இந்த திகதியில் பெற்றோர் கூட்டத்துக்கு சமூகம் அளிக்கையில் கையில் பணமாக ரூ. 1,290 கொண்டு வரவேண்டும் என இவர்கள் சொல்லவில்லை?? 


எங்களின் பாடசாலையில் நாங்கள் விற்பனை செய்யும் School Bag இணை தான் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் வாங்க வேண்டும் என்றும் இதன் விலை ரூ. 1,100 என்றும் சொல்லவில்லை?? 


பக்கத்தில் ஒரு குரல், பெண் குரல் "School Bag வாங்கிக்கொள்ளுங்க, இங்கே எப்போது லோக்கடவுன் போடப்போறாங்க என்று தெரியாது" என்று. இவை எல்லாம் Totally Fake நியூஸ் அல்லவா?


சரி இப்படியான ஒரு அறிக்கை வெளியிட்டமைக்கு கோடி நன்றிகள் SDS sir அவர்களுக்கு!


நான் அறிந்தவரையில், SDS என்பது பாடசாலை அபிவிருத்திக்காக வெளியில் இருந்து பணம் படைத்தவர்களிடம் இருந்து உதவி பெற்று பாடசாலை அபிவிருத்திக்காக பங்களிப்பது. கல்வி கற்க வரும் மாணவர்களின் பெற்றோர்களின் வருடா வருடம் பணம் வசூலிக்கும் படி எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இது வருட வருடம் செய்து வருவதால் அது ஒரு கட்டாய கடமைபோல் ஆக்கி விட்டனர்.


அதுவும் ஓர் அரச பாடசாலையில் இந்த நிலை அதுவும் புத்தளத்தில் மாத்திரம் இந்த அவல நிலை. இது வருடா வருடம் தொடர் கதையாகவே சென்று கொண்டிருக்கிறது.


அதுவும் கையில் இருப்பதை கட்டுங்கள் என சொல்லவில்லை வரை அரை கட்டணம் ஆயிரக்கணக்கில். இந்த கொரோனா தொற்றுப் பரவலினால் பொதுமக்களாகிய நாம் எதிர்கொள்ளும் துன்பம் உங்களுக்கு எங்கே புரிய போகிறது ஒரு வேலை சாப்பாட்டுக்கே அல்லல் படும் ஜனங்கள் நாம்!


தொழிலை இழந்து நிற்கதியான எங்களை போன்றவர்களின் நிலை இது. உங்களுக்கு அரச சம்பளம் எங்களுக்கு???


அரச பாடசாலை என்று பெயர் தாங்கி. புத்தளம் முஸ்லீம் பாடசாலைகள் இப்படி செய்தால் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பணத்தால் ஆடை கூட தைக்க சொல்லிவிடுவார்களோ என்று இருக்குறது.

 

மேலும் குறிப்பிட்ட பாடசாலை SDS சங்கத்தினரால் வெளியிட்ட அறிக்கையின் படி, யாழ் நியூஸ் தளத்தில் பதிவிடப்பட்ட செய்தி "முற்றிலும் போலியானது" என்று அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், எதிர்வரும் 26/12/2020 இல் இவர்கள் எங்களிடம் பணம் எதிர்பார்க்கவில்லை என்ற சான்று இவர்களே வழங்கியமைக்கு நன்றிகள். வஸ்ஸலாம்.


எமது இச்செய்திப் பதிவின் நோக்கம், எவ்வொறு தனிமனிதன் மீதான தாக்குதலோ அல்லது விமர்சனமோ அல்ல, மாறாக இக் கொரோனா காலப்பகுதியில் மக்களின் கஷ்ட நஷ்டங்கள் உணர்ந்து நடந்து கொள்ளுமாறும் இதுபோன்ற சங்கங்கள் மற்றும் பாடசாலைகளினது தவறை சுட்டிக்காட்டும் பதிவாகவே அமைந்துள்ளது.


இது தொடர்பான எமது செய்தி ஊடகத்தின் முன்னைய பதிவுகளின் இணைப்புகள் கீழே...


https://www.yazhnews.com/2020/12/fathima-muslim-girls-college-money.html


https://www.yazhnews.com/2020/12/sds-puttlam-muslim-balika-college-money.html



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.