அமானா வங்கியும் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியும் இணைந்து எம்மிடம் பணம் பறிக்கிறார்கள்!! பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை ஒருவரின் குரல்!

அமானா வங்கியும் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியும் இணைந்து எம்மிடம் பணம் பறிக்கிறார்கள்!! பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை ஒருவரின் குரல்!

நான் புத்தளத்தில் இருந்து மொஹமட் ஷாதீன். எனது மகள் பிரிமீயர் சாஹிரா மன்னார் வீதி சின்ன சாஹிரா என்று அழைக்கப்படும் பாடசாலையில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் தோற்றியவர் ஆவார்.


தனது ஐந்தாம் தர கல்வியை முடித்த எனது மகளை, 6ஆம் தர சேர்க்கைக்காக புத்தளம் பாதிமா மகளீர் கல்லூரிக்கு இடம் மாற்ற சகல ஆவணங்களையும் குறித்த பாடசாலையில் சமர்ப்பித்து பின்னர் எனது மகள் பாடசாலையில் இணைத்துக்கொள்ளப்பட்டார். இதுபோல் ஏறத்தாழ 300 மாணவ மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.


இந்நிலையில், கடந்த 07.12.2020 அன்று, பெற்றோர்கள் கூட்டம் ஒன்று நடக்க இருப்பதாக பாடசாலை முகவரியிட்ட கடிதம் மூலம் எனக்கு அழைப்பு கிடைத்தது. 


$ads={2}

அந்த பெற்றோர் கூட்டத்துக்கு போய் இருந்தேன். அங்கே பலர் உரையாற்றினார்கள். அதில் அமானா வங்கியின் முகாமையாளர் வேறு வந்திருந்தார். 


பின்னர் பாடசாலையில் சேர்க்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் குறைந்தது தலா ரூ. 7,000 பணமாக எதிர்வரும் 26/12/2020 முன்னதாக வங்கியில் வரவு வைக்க வேண்டும் என வங்கி இலக்கம் குறிப்பிடப்பட்ட வங்கி பணவைப்பு SLIP ஒன்று ஒவ்வொருவருக்கும் பாடசாலையினால் வழங்கப்பட்டது. 


அதை வழங்கும் போது அமானா வங்கியின் முகாமையாளர் ஒவ்வொருவரிடமும் கேட்கிறார் "நீங்கள் எவ்வளவு கட்ட போறீர்கள்?" என்று. 


அமானா வங்கி முகாமையாளருக்கும் பாடசாலைக்கும் என்ன தொடர்பு? என நான் கேள்வி எழுப்புகிறேன்.


இந்த பணத்தை வைப்பிலிட வங்கிக்கு வரும் போது, மேலதிக பணமாக ரூ. 1,290 கொண்டு வரும் படியும், நாங்கள் பாடசாலையில் விற்பனை செய்யும் School Bag இல் தான் பிள்ளைகள் பாட புத்தகங்களை கொண்டுவர வேண்டும் எனவும் Bag ஒன்றின் விலை ரூ. 1,100 எனவும் சொன்னார்கள். 


$ads={2}


இந்நிலையில், பாடசாலைக்கு இவ்வளவு தொகை பணத்தை வாங்குவதன் நோக்கம் மைதானத்துக்கு மண் போட வேண்டுமாம் இன்னும் பல வேலைகள் இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். இந்த பணம் கட்டப்படாமல் விட்டால் பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனவும் சொல்லுகிறார்கள். 


புத்தளத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு இங்கே இடம் இல்லை எனில் பணவசதி இல்லா பிள்ளைகள் எங்கே போவது? கொரோனா தாக்கம் தலைதூக்கி நிக்கும் இத்தருணத்தில் தொழில் இழந்து வறுமைக்கோட்டில் வாழும் எங்களை போன்ற மக்களுக்கு இந்த பணம் எப்படி கட்ட முடியும்?


தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். நான் மட்டும் அல்ல, என்னை போன்று பலர் இந்த நிலையில் அவதிப்படுகிறார்கள். இருந்தும் எங்கே எப்படி நியாயம் கேட்பது என தெரியாமல் வேறு வழியின்றி திக்கித்தடுமாறி நிக்கிறார்கள். 


இவர்கள் இப்படி பணம் வசூலித்து ஏழை மக்களின் இரத்தம் குடிக்க பார்க்கும் காரணம் தான் என்ன?  


அமானா வங்கி முகாமையாளர் எதற்கு எங்களிடம் எவ்வளவு கட்ட போறீங்க என்று கேட்க வேண்டும்? இதுக்கு எல்லாம் யார் பதில் சொல்லப் போகிறார்கள்? 


இந்த பதிவின் முக்கிய நோக்கம் இதுபோன்ற செயல்களின் ஈடுபடுவோரை கல்வி அமைச்சரின் கவனத்துக்கும் அதி மேதகு ஜனாதிபதி கவனத்திற்கும் கொண்டு சேர்த்து எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் நான்...


நன்றிகளுடன்,


மொஹமட் ஷாதீன்

புத்தளம்


இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றடையும் வரை பகிருங்கள்.


குறித்த தந்தையின் குரல் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post