தனிமைபடுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கான அதிரடி எச்சரிக்கை!

தனிமைபடுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கான அதிரடி எச்சரிக்கை!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட பொலிஸ் குழுவினர் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த பகுதிகளை விட்டு எந்தவித காரணத்திற்காகவும் வெளியே செல்லமுடியாது. அவ்வாறு செல்வது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பான செயற்பாடாகும்.

இந்நிலையில், இந்த பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட பொலிஸ் குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களும் தங்களது வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.


$ads={2}

மேல்மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்லும் நபர்களுக்கான அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது மேல்மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு பயன்படுத்தப்படும் 11 பகுதிகளில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

11 இடங்கள் தொடர்பில் அறிய இங்கே க்லிக் செய்யவும்

இதேவேளை, பொது போக்குவரத்து சாதனங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை சோதனைச் செய்வதற்காக சிவில் உடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது மக்கள் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதுடன், வீதி விபத்துகள், கொள்ளையர்களிடமிருந்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளாகும். அதற்கமைய இந்த சட்டவிதிகளை மீறியதாக இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் 30 திகதி முதல் இதுவரையில் 1,705 பேர் வரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் நாட்டில் எந்த பகுதியில் வசித்து வந்தாலும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும் பொது மக்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post