அரச மற்றும் தனியார் நிறுவன அனைத்து ஊழியர்களுக்குமான விசேட செய்தி!

அரச மற்றும் தனியார் நிறுவன அனைத்து ஊழியர்களுக்குமான விசேட செய்தி!

விரு அபிமன் எனப்படும் கொவிட் 19 காப்புறுதி திட்டத்தின் கீழ் அரச மற்றும் தனியார் துறையின் அனைத்து ஊழியர்களையும் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட விரு அபிமன் கொவிட் 19 காப்புறுதி திட்டத்தில், கொரோனா தொற்றை ஒழிக்கும் பணியில் முன்னின்று செயற்பட்ட வைத்தியர்கள், சுகாதார துறையினர், முப்படையினர் மற்றும் பொலிஸ் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.


$ads={2}

இந்த நிலையில், விரு அபிமன் கொவிட் 19 காப்புறுதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரச மற்றும் தனியார் துறையின் அனைத்து ஊழியர்களையும் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விரு அபிமன் கொவிட் 19 காப்புறுதி திட்டத்தின் கீழ், உயிரிழக்கும் நபர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில், நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபா வீதம் அதிக பட்சமாக 90 நாட்களுக்கு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post