பொதுத் தேர்தல் காரணமாக மேல் மாகாணத்தில் இம்மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என மேல்மாகாண தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு வாகனத்திற்கும் அபராதம் செலுத்தாமல் வாகன வருவாய் உரிமம் பெறுவதற்கான கடைசி திகதி நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதி என்று செயலகம் மேலும் குறிப்பிடுகிறது.
தேர்தல் நிறைவடைந்து கடமைகள் ஆரம்பிக்கப்படும் முதல் நாளன்றே, எவ்விதமான தண்டத்தையும் செலுத்தாது, வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் செயலகம் அறிவித்துள்ளது.