புதிய பாடசாலை தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு சிரமப்படும் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.
கேகாலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் கல்வியாண்டுக்குத் தயாராகும் குடும்பங்களின் நிதிச் சுமைகளை இலகுபடுத்தும் நோக்கில், அனைத்து குழந்தைகளுக்கும் அத்தியாவசிய கல்விப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்வதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.