தனது காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் இன்று (30) பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பயாகல, பஹலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயாகல தியலகொட பிரதேச கடற்கரைக்கு வருகை தந்த தம்பதியினருக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதன் போது அவர் தலையில் பாறையால் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பாறையை பொலிஸார் கண்டுபிடித்துள்ள நிலையில், குறித்த இளம் தம்பதியினருக்கு இடையில் நீண்டகாலமாக உறவுமுறை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து, சந்தேகநபர் இது தொடர்பில் தனது நண்பருக்கு அறிவித்ததையடுத்து, பாதிக்கப்பட்ட நபரை அம்புலன்சில் ஏற்றி களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எவ்வாறாயினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயாகல, மகொன பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் ஆவார். அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)