நாளை (31) நினைவுகூரப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாகாணங்கள் 01 நவம்பர் 2024 வெள்ளிக்கிழமை padasalaigalukku விடுமுறை அறிவித்துள்ளன.
தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் இன்று பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காரணமாக விடுபட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமையன்று வழங்கப்படும் என மாகாண கல்விச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)