மஜ்மா நகரில் மாபெரும் பள்ளிவாசல்! அல்ஹம்துலில்லாஹ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஜ்மா நகரில் மாபெரும் பள்ளிவாசல்! அல்ஹம்துலில்லாஹ்!


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!


கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பூமி, சுமார் 3000 ஈமானிய உறவுகளை தன்னகத்தே சுமந்து நிற்கும் மஜ்மா நகர்.


அல்லாஹ் எழுதிவைத்த விதிப்படி,  ஒரு அத்மாவை படைக்க எந்த இடத்தில் அல்லலாஹ் மன்னை தேர்வு செய்தானோ, அதே இடத்தில் அவன் அடக்கப்படுவான் இதுவே இறைவனின் நியதி. 


மேற் சொன்ன  அல்லாஹ்வின் விதிப்படி covid 19 காலப் பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இறை அழைப்பை ஏற்ற அவனின் அடியார்கள் அந்த புனித பூமியிலே  அடக்கப்பட்டார்கள்.


இவர்களின் அடக்டஸ்தளங்களை நாடிச் செல்லும் உறவுகளுக்காகவும், இங்கு அடங்கப்பட்டிருக்கும் அத்தனை ஈமானிய உறவுகளின் சரித்திரங்களை பாதுகாக்கவும், அங்கு பள்ளிவாசல் ஒன்றை அமைக்க வேண்டும் என பல உள்ளங்கள் அவா கொண்டிருந்தன.


இருந்த போதிலும், அங்கு அடங்கப்பட்டிருக்கும் அத்தனை அடியார்களுக்காகவும், அதை நிறைவேற்றும்   உதிப்பையும்,  வாய்பையும், வசதியையும் பேருவளையைச் சேர்ந்த ஒரு நல்லுள்ளம் கொண்ட ஒரு  உத்தமத்தாயின் பிச்சனங்களுக்கு அல்லாஹ் வழங்கினான். 


சுமார் 17 ஏக்கர் நில பரப்பைக் கொண்ட இம்­மை­ய­வா­டியில் 2986 முஸ்­லிம்­க­ளி­னதும், 293 பெளத்­தர்­க­ளி­னதும், 269 இந்­துக்­க­ளி­னதும், 86 கிறிஸ்­த­வர்­க­ளி­னதுமாக மொத்­த­மாக 3634 உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.


அந்த வகையில் 11/1/2022 அன்று காலஞ் சென்ற பேருவலை சீனங்கோட்டை மர்ஹூமா ஹாஜியானி இரீபதுல் ஹைரியா என்ற தாய் அவர்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். 


அல்லாஹ்வின் நாட்டம் அந்த பாக்கியத்தை அந்த கும்பத்திற்கு வழங்கினான். இப்படியான ஒரு பாக்கியத்தை வழங்கி அல்லாஹ் அந்தத் தாயை கெளரவித்தான். 


அல்லாஹ்வின் கிருபை, அன்னாரின் குடும்பத்தினரால், பைதுல் ஹைராத் என்ற அழகிய பெயர் கொண்ட, அழகிய பெயர் நாமத்துடனும், அழகிய தோற்றத்துடனும் பரிபூரணமான அனைத்து வசதிகளுடனும் கொண்ட மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது.


இந்த  மஸ்ஜித் எதிர்வரும் 1/10/2024 ம் திகதி அஸர் தொழுகையுடன் அல்லாஹ்வுக்காக வக்ப் செய்து திறந்து வைக்கப்படும் என நியமிக்கப்பட்டுள்ளது.


ஸவாஹிர் ஸரூக் ஹாஜியாருடைய அன்பு மனைவியின் பெயரில் அன்னாருக்காக, அன்னாரின் குடும்பத்திரால் கட்டப்பட்ட இம் மஸ்ஜித், இன்ஷா அல்லாஹ் அன்றைய தினம் அஸர் தொழுகையுடன் அங்கு அடங்கப்பட்டிருக்கும் உறவுகளை தரிசிக்க வரும் ஈமானிய உறவுகளுக்கா ஹதியா (வக்ப்) செய்யப்படும்.


அல்லாஹ் மிக உயர்ந்த இரக்கமுள்ளவன். எவன் ஒருவன் ஒரு நாற்காரியத்தைச் செய்ய நாட்டம் கொண்டானே அவனுக்கு அத‌ற்கான நண்மையை எழுதிவிடுகின்றான்.


எனவே எவர்கள், அங்கு நற்காரியம் ஒன்றை செய்ய வேண்டும் என நாடினார்களோ அவர்களுக்கெல்லாம் நண்மை நாடட்டும்.


அனைத்து உறவுகளின் நலவையும் நாடி இதைச் செய்த அந்தத் தாயின் குடும்பத்தினரின் காரியத்தை  அல்லாஹ் ஏற்றுக் கொண்டு, அதற்கான கூலியை அவர்களுக்கு வழங்கி, அத்தாயின் கபுரையும் அங்கு அடங்கப்பட்டிருக்கும் அத்தனை கபுராளிகளின் கபுரையும் விசாலமாக்கி, சுவர்கத்தின் பூஞ்சோலையாக ஆக்கிவைக்க நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக. (ஆமீன்)


தகவல்: 

பேருவளை ஹில்மி



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.