அத்துருகிரியவில் பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்கு வந்த கிளப் வசந்த என அழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்று நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
வர்த்தக நிலையமொன்றில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அளுத்கம தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் கேபிஐ (KPI) என எழுதியுள்ளார் எனவும் சந்தேகநபர்களை அத்துருகிரிய, கல்பொத்த வீதி பகுதிக்கு காரில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.