தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக விமான சேவையில் இருந்து வெளியேற்றப்பட்ட 08 விமானங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு 5,646.76 மில்லியன் ரூபா வரி வாடகையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையின் வான் நடவடிக்கைகளுக்கு 27 விமானங்கள் தேவைப்பட்ட போதிலும் அவர்களிடம் 24 விமானங்களே உள்ளதாக அறிக்கை காட்டுகிறது.
2022-2023 ஆண்டுகளுக்கான தொடர்புடைய நிதிநிலை அறிக்கைகளை வெளியிடும் போது தேசிய தணிக்கை அலுவலகம் இவ்வாறு கூறுகிறது.
அந்த 24 விமானங்களில் 08 விமானங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பாவனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தனது கணக்காய்வு மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் அந்த 08 விமானங்களுக்கான வாடகை செலுத்தப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி சுமார் 05 பில்லியன் ரூபாவாகும்.
அண்மையில், ஶ்ரீலங்கன் எயார்லைண்சினால் கையகப்படுத்தப்பட்ட நியோ (NEO) ரக விமானங்கள், அந்த விமானங்களின் எஞ்சின்களில் ஏற்பட்ட உலகளாவிய பிரச்சனை காரணமாக, விமான நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இயந்திரங்கள் பழுதுபார்க்கும் வரை மேலதிக இஞ்சின்களை வழங்குவதற்கு உற்பத்தியாளர் விமான நிறுவனத்துடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 2 ஏ320 நியோ விமானங்கள் மற்றும் 4 ஏ321 நியோ விமானங்கள் உட்பட நியோ வகையைச் சேர்ந்த 6 விமானங்களைக் கொண்டுள்ளது.
தற்போது, A320NEO விமானம் (4R-ANA) மற்றும் A321NEO விமானம் (4R-ANE) ஆகியவை விமான நடவடிக்கைகளில் இணைந்துள்ளன.