VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்தத் தயார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்தத் தயார்!


பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) பற்றிய தவறான கருத்துக்கள் ஒழுங்குபடுத்தப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அனைத்து பொருட்களும் VAT வரிக்கு தகுதியானவை என பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகவும், அதுவே விலை உயர்வுக்கு காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.


VAT இல்லா கடைகளை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு தெரிவு செய்வதற்கு இது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


அதனடிப்படையில், போட்டி ரீதியிலான வர்த்தகம் மற்றும் நியாயமான முறையில் ஈடுபடத் தயாராக உள்ளவர்களுக்காக VAT இல்லா பொருட்களான காய்கறிகள், அரிசி, குழந்தை பால் மாவு போன்றவற்றிற்காக நாடு முழுவதிலும் உள்ள கடைகளின் வலையமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.