தன்னை 'விஸ்வ புத்தர்' என்று அழைத்துக் கொண்ட காவி அங்கி அணிந்த துறவி, பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் முதலில் டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், அதன் பின் அவருக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜனவரி 08 ஆம் திகதி பிணை வழங்கியிருந்தார்.
விடுதலையின் பின், அவர் பல ஒன்லைன் பேச்சு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன் அவர் அடுத்த வாரம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் சமரவிக்கிரம நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் பொருட்டே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.