
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களே இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனிநபர்கள் இதுபோன்ற புண்படுத்தும் கருத்துக்களை தொடர்ச்சியாகவும், போலி கணக்குகளின் கீழும் பதிவிடுவது கண்டறியப்பட்டது.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் போன்ற ஏனைய நிகழ்வுகளுடன் இந்தச் சம்பவமும் சமூக ஊடகங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதையே காட்டுவதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.