உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த அதே வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் உடுகம பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் உடுகம வைத்தியசாலையின் ஊழியராக கடமை புரியும் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட தாதி குளியலறையில் ஆடை மாற்றும் போது காணொளி எடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.