2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றின் 25வது போட்டி தற்போது இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இன்று இடம்பெற்றது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 32 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும், ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், மஹிஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன்படி இலங்கை அணியின் வெற்றிக்கு 157 என நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை அணி 25.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 157 என்ற இலக்கை எட்டி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
போட்டியில் ஆரம்பத்தில் இலங்கை அணி, இரு விக்கட்டுக்களை இழந்த போதிலும் சதீர சமரவிக்ரம மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஜோடி இலங்கை அணியினை வெற்றி பெற திறமையாக துடுப்பாடினர்.
இலங்கை அணி சார்பாக ஆட்டமிழக்காது பெதும் 77* ஓட்டங்களும், சதீர 65* ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் விலி இரு விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
உலககிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் இலங்கை அணி இங்கிலாந்து அணியினை வீழ்த்தியுள்ளது.