கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (27) ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் அறுவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் காலை 09.30 மணியளவில் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளதுடன், பல வர்த்தக நிலையங்கள் தீயில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, இது குறித்து புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A fire broke out at a shop in Main street, Pettah. At least seven fire engines sent -Fire Department pic.twitter.com/gFGoj5c5ws
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) October 27, 2023