களுத்துறையில் காணி தொடர்பாக இடம்பெற்ற மோதலில் தலையில் தடியால் பலமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பின்ஹேன குருகந்தை பிரதேசத்தின் கொஹிலவத்தை பகுதியை சேர்ந்த சியோனிஸ் என்ற பெயருடைய 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் பேருவளை, பயாகலை சிங்ககமை பிரதேச பஸ் நிலையத்திற்கு அருகில் இரத்த வெள்ளத்தில் தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.