முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு காத்தான்குடியில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு காத்தான்குடியில்!

ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பான ஸ்ரீலங்கா பென் கிளப்பின்( SLPC) யின் "முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு - 2023" நாளை (21)  சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு "குடும்பம் எங்கள் விழி ஆற்றல் எங்கள் வழி" தொனிப் பொருளில் காத்தான்குடி சீஐஜி மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் ( SLPC)  ஸ்தாபகத் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து அறுபது பெண் எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் முதன்மை விருந்தினர்களாக பேராதனை வளாக மெய்யியல்துறை ஓய்வுநிலைத் தலைவரும் பேராசிரியருமான எம்.எஸ்.எம்.அனஸ் மற்றும் காத்தான்குடி நகரசபை செயலாளர் றிப்கா ஷபீன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர், காரைதீவு கோட்டக்கல்விக் பணிப்பாளர் பைந்தமிழ்க்குமாரன் ஜே. டேவிட், மட்டக்களப்பு உதவி கல்விக் பணிப்பாளர் முருகு தயானந்தன், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகரும் எஸ்.எல்.பி.சி யின் போஷகருமான கலாநிதி மஸ்ரூபா முகம்மது மஜீத், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும் எஸ்.எல்.பி.சி யின் போஷகருமான ஏ.எல் தௌபீக், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், ஒலி, ஒளி சிரேஷ்ட ஊடகவியலாளர் பா ஹாஷிம் ப அலவி அஷ்ஷேக் இர்பான் மௌலானா, மின்னல் வெளியிட்டகப் பணிப்பாளர் நாவலாசிரியரும் எஸ்.எல்.பி.சி.யின் போஷகருமான கவிஞர் அஸீஸ் எம். பாரிஸ், இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் முன்னாள் நகர சபை உறுப்பினர் கவிமணி ரீ.எல். ஜவ்பர் கான், அவதானி மீடியாவின் பணிப்பாளர் கவிஞர் மதியன்பன் மஜீத் ஆகியோர் நிகழ்வில் கௌரவ அதிதிகளாகவும் கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும் எஸ்.எல்.பி.சி.யின் போஷகருமான ஏ.எம்.தௌபீக் மற்றும் எம்.எச். பௌசுல் ஹிபானா காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உதவியாளர் பி. சிந்து உஷா, காத்தானகுடி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நளீம் (நளீமி), ஊடகவியலாளரும் பல்துறைகலைஞருமான கலைச்சுடர் எம்.எஸ்.எம். ஸாகிர், கல்முனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா பிரதீபன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மூன்று அமர்வுகளாக நடைபெறும் இவ்விழாவில், முதல் அமர்வு பெண்களுக்கு மட்டுமானது. 

இரண்டாம் அமர்வில் இருபத்திரெண்டு முஸ்லிம் பெண்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய "இமயம் தழுவும் இறக்கைகள்" கவிதைத் தொகுதி வெளியிட்டு வைக்கப்படவுள்ளதுடன் கவிதை, சிறுகதை மற்றும் ரமழான் மாதப் போட்டிகளில் வெற்றியீட்டியோர்களுக்கான பரிசளிப்பும் நடைபெறவுள்ளது.

மூன்றாவது அமர்வில் SLPC யின் சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் நெறியாளர்கள் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இப்பெரும் விழாவில், கல்விமான்கள், கலைஞர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.