அண்மைக்காலமாக எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமைக்கு ஏற்ப மூன்று உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (05) முதல் அமுலாகும் விதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைத் தெரிவித்தார்.
கொத்து, ரைஸ் மற்றும் பிளேன்டி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தேநீரின் விலை 10 ரூபாவினாலும், கொத்துரொட்டி விலை 20 ரூபாவினாலும் மற்றும் சோற்று பார்சலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)