சீனாவில் நடந்து வரும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 வருடங்களின் பின்னர் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் எமது நாட்டிற்காக தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்த 18 வயதான தருஷி கருணாரத்னவுக்கு ஒரு கோடி ரூபாய் பணப்பரிசு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது என அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை கொண்டு வந்த தருஷியை பாராட்ட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், அதன்படி இந்த பணப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.