நாங்கள் அனைவரும் திருடர்களே! குமார வெல்கம தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாங்கள் அனைவரும் திருடர்களே! குமார வெல்கம தெரிவிப்பு!


"நாங்கள் அனைவரும் டொலர்களுக்கு விருப்பமானவர்கள்தான். இங்கே ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஜேவிபி என்று இல்லை நாங்கள் அனைவரும் திருடர்களே. இங்கே நாம் அனைவரும் ஒரே படகில் போகின்றவர்களே" என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,


"சுகாதார துறை விடயத்தில் நான் சுகாதார அமைச்சரை நோக்கி விரல் நீட்டப் போவதில்லை. ஆட்சியாளர்களே இவர்களை சரியாக வழிநடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 


யாராவது தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் அதனை ஜனாதிபதி செய்யவில்லை.


இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்கள் மீண்டும் செல்வதென்றால் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியை கோருகின்றேன். வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்ய வேண்டாம். ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஆட்சியாளரே பொறுப்பு கூற வேண்டும்.


இதேவேளை சேனல் 4 தொடர்பில் கூறப்படுகின்றது. அதனை நான் 50 வீதமும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ராஜபக்‌ஷக்கள் யுத்தம் செய்ததால் அவர்களுக்கு எதிராக இவ்வாறு செய்வதாகவும் இருக்கலாம். அல்லது அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் சேனல் 4 அவசியமில்லை.  


எவ்வாறாயினும் மேலே கடவுள் இருக்கின்றார். அவர் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டார். அதில் ஒருவர்தான் கோட்டாபய, அவரை நாட்டை விட்டும் விரட்டினர். அதேபோன்று வீதியில் யாசகம் செய்து பணம் சேகரிப்பவர்களும் உள்ளனர்" என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.