புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம்! வவுனியாவில் அதிர்ச்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம்! வவுனியாவில் அதிர்ச்சி!


வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து மரணமடைந்திருந்தார்.


குறித்த சிறுமியின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்று இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. 


இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு வாரங்களே ஆன நிலையில் அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.