இந்தியாவிடம் இருந்து நன்கொடை; இரத்த வகை, வங்கிப் பரிவர்த்தனை தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய புதிய டிஜிட்டல் அடையாள அட்டை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவிடம் இருந்து நன்கொடை; இரத்த வகை, வங்கிப் பரிவர்த்தனை தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய புதிய டிஜிட்டல் அடையாள அட்டை!


இந்தியாவின் நன்கொடையின் கீழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எனும் விசேட டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.


ஐக்கிய தேசிய கட்சியின் தலையகமான சிறிகொத்தவில் நேற்று (13) இடம்பெற்ற சுயதொழிலாளர்கள் அமைப்பின் 1,200 பேருக்கு ஐக்கிய தேசிய கட்சி அங்கத்துவம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


இந்தியாவின் நன்கொடையின் கீழ் எமது நாட்டுக்கு அறுமுகப்படுத்தடும் விசேட டிஜிட்டல் அடையாள அட்டை (Unique Digital Identity) தயாரிக்கும் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைக்காக 450 மில்லியன் இந்திய ரூபா இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோப்பால் பக்லே வழங்கி இருக்கிறார்.


இந்த வேலைத்திட்டத்துக்காக உலகில் உள்ள  தகவல் தொழிநுட்பத்தின் பிரதான நிறுவனங்கள் பல எமது நாட்டுக்கு அது தொடர்பான அறிவை இலவசமாக வழங்கி இருப்பதுடன், அதில் பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனமான பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் மன்றங்களும் உள்ளடங்குகின்றன.


இந்தியா தற்போது டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை அந்த நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதன் மாதிரி படிவத்துக்கமையவே எமது நாட்டு மக்களுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை ஒன்றை விநியோகிக்க இருக்கிறது. 


ஒரு நபரின் உயிரியல் தகவல் (இரத்த வகை முதலிய தகவல்கள்) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவருக்கான தனி இணையத்தள கணக்கில் சேமிக்கப்படும். குறி்த்த நபரின் அனுமதியுடன், வங்கிப் பரிவர்த்தனைகள் அல்லது பிற நிறுவனத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தத் தகவல்களை அனுப்பும் வசதியும் இந்த புதிய அடையாள அட்டையுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கும். 


நபரொருவர் இந்த வழியில், தனது கடமை தேவையை மேற்கொள்வதற்காக குறித்த நிறுவனத்துக்கு செல்லாமல் இணையத்தளம் மூலம் மேற்கொள்ள முடியுமான வசதி கிடைக்கிறது. முழு நாட்டையும் ஈ வலயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிந்தனைக்கமைய இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கபடுவதுடன் இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணையில் இடம்பெறும் எதிர்வரும் வருடம் இறுதியாகும்போது முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.