சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயற்சித்தால் கொதிநீரை ஊற்றுங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயற்சித்தால் கொதிநீரை ஊற்றுங்கள்!


உணவு உண்டு விட்டு கட்டணத்தை செலுத்த மறுப்பவர்களை சோறு தாளிக்கும் பாத்திரத்தைக் கொண்டு தாக்குங்கள் அல்லது கொதிநீர் மற்றும் கழிவு நீரால் ஊற்றுங்கள் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.


பழம்பெரும் பாடகர் சமன் டி சில்வா உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டிக்கும் போதே அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் இவ்வாறு தெரிவித்தார்.


உணவை உண்ட பின் கட்டணத்தை செலுத்த மறுப்பவர்களுக்கு உச்சபட்ச  தண்டனை வழங்குமாறு சம்பத் உணவக உரிமைாயாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.


"அவ்வாறானவர்களுக்கு உணவகத்திலுள்ள கொதிநீர் அல்லது கழிவு நீரைக் கொண்டு ஊற்றுமாறு நான் உத்தரவிடுகிறேன். இல்லையென்றால் அவர்களை சோறு தாளிக்கும் பாத்திரத்தால் முகத்தில் நேரடியாக தாக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.


"யாருக்கும் இலவசமாக உணவு வழங்க வேண்டாம். கடும் சிரமங்களுக்கு மத்தியில் உணவக உரிமையாளர்கள் உணவு தயாரிக்கின்றார்கள். சில அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார சேவை அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் வழக்கமாக பணம் கொடுக்காமல் தான் உணவு உண்கிறார்கள்" என சம்பத் தெரிவித்தார்.


கடந்த சனிக்கிழமை (01) இரவு பாணந்துறையிலுள்ள உணவகத் ஒன்றிற்கு  பாடகர் சமன் சில்வா வேறு சிலருடன்உணவருந்த சென்றுள்ளார்.


அப்போது அங்கு பணி புரிபவர்களுக்கும் சில்வாவிற்குமிடையில் கடும் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சில்வா உண்ட உணவிற்கான பணத்தைக் செலுத்தாமல் நழுவ முயற்சித்துள்ளார்.


குறித்த சம்பவத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகிய நிலையில் உணவகத்தின் சில பணியாளர்கள் காயமடைந்துள்ளதுடன் உணவகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.