
அமெரிக்க டொலர் மற்றும் ரூபாவின் பெறுமதியை சந்தை நிலவரத்தின் அடிப்படையில் தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அபிவிருத்திப் பத்திரங்களில் முதலீடு செய்த வைப்பாளர்களுக்கு வழங்குவதற்கு வங்கிகள் போதுமான டொலர்களை சேகரிக்க வேண்டியதன் அவசியத்தால் நிலைமை பாதிக்கப்பட்டது.
இதன் விளைவாக, வங்கிகள் சந்தைக்கு டொலர்களை வெளியிடுவதை தற்காலிகமாக கட்டுப்படுத்தலாம். இது ஒரு தற்காலிக நிலையே தவிர நீண்டகாலப் போக்கு அல்ல என்றும் சியம்பலாபிட்டிய வலியுறுத்தினார்.