கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருட ஜூன் மாதத்தில், கொழும்பு நகரின் பணவீக்கமானது 12 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
கடந்த மே மாதம் பணவீக்கம் 25.2 சதவீதமாக நிலவியது.
அத்துடன், மே மாதத்தில் உணவு பணவீக்கமானது 21.5 சதவீதமாக நிலவியது.
எனினும், ஜூன் மாதத்தில் உணவு பணவீக்கமானது 4.1சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் மாதத்தில் 27 சதவீதத்திலிருந்து 16.2 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.