டயானாவின் ஆட்டம் விரைவில் அடங்கும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டயானாவின் ஆட்டம் விரைவில் அடங்கும்!

டயானா கமகே தண்ணீர் சூடாகும் வரை மட்டுமே நடனமாடுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திரமான நீதித்துறை மீது தமக்கு நூறு சதவீத நம்பிக்கை இருப்பதாகவும், இலங்கைப் பிரஜையற்ற டயானா கமகேவைக் காப்பாற்ற அரசாங்கம் என்ன ஆட்டம் ஆடினாலும் இறுதியில் நீதியே வெல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலை பிற்போட்டு அரசாங்கம் ஆடும் ஆட்டமும் டயானாவின் ஆட்டமும் விரைவில் முடிவுக்கு வரும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.