
HS 286 பிரிவின் கீழ் உள்ள பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், இது ஜூன் 09, 2023 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பொருட்களில் உணவுப் பொருட்கள், குளியலறை பாகங்கள், கட்டுமானத் தொழில் தொடர்பான பொருட்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.