நான் ஒருபோதும் குறுக்கு வழியில் பதவிக்கு வரமாட்டேன்! -மஹிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் ஒருபோதும் குறுக்கு வழியில் பதவிக்கு வரமாட்டேன்! -மஹிந்த


தான் சதித் திட்டங்கள் ஊடாகப் பிரதமர் பதவியை கைப்பற்றப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது மட்டுமன்றி வேடிக்கையானது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், மொட்டுக் கட்சிக்கே கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்கினர். அதன் பிரகாரம் பிரதமர் பதவியை நான் பொறுப்பேற்றேன்.


நாட்டில் ஏற்பட்ட ஒரு சில தவறான நடவடிக்கைகளால் கடந்த வருடம் பிரதமர் பதவியிலிருந்து விலகினேன்.


எனினும், எமது கட்சியின் ஆட்சியே தொடர்கின்றது. எமது கட்சியின் உறுப்பினரே பிரதமராகவும் உள்ளார். மீண்டும் ஒரு தேர்தலில் மக்களின் ஆணையை ஏற்று நான் பிரதமராவேன் எனவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.