
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று, குஜராத் டைட்டன்ஸ் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
சென்னை அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் 60 ஓட்டங்களும், டெவோன் கான்வே 40 ஓட்டங்களும், விந்திர ஜடேஜா 22 ஓட்டங்களும் பெற்றனர்.
20 ஓவர்கள் முடிவில் பதில் இன்னிங்சை விளையாடிய டைட்டன்ஸ் அணியால் 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
டைட்டன்ஸ் இன்னிங்ஸ் சார்பாக ஷுப்மன் கில் 42 ஓட்டங்களையும், தசுன் ஷனக 17 ஓட்டங்களையும், ரஷித் கான் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.