
வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சந்திப்புகளுக்கு இடையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் மார்ட்டின் ரேஸருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதுடன், அவர் தனது டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி அடிப்படையிலான சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.