
ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வகயமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உரையாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி கூட்டத்தில் பங்கேற்று இருந்த நபர் பைப் வெடி குண்டை வீசினர். இந்த வெடிகுண்டு வெடித்ததி பொதுக்கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதுமாக கரும்புகை சூழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதல் முயற்சியில் இருந்து காயம் எதுவும் இன்றி ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார். ஜப்பான் பிரதமரை உடனடியாக பாதுகாப்பு படையினர் பத்திரமாக அழைத்து சென்றனர். பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்ததும் கூட்டத்தில் பங்கேற்று இருந்த மக்கள் அலறியடித்து அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். குண்டு வீசிய நபரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.