திடீரென உயர்வடைய ரூபாவின் பெறுமதி! காரணம் என்ன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திடீரென உயர்வடைய ரூபாவின் பெறுமதி! காரணம் என்ன?

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான சூழல் உட்பட பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் அறிக்கையின்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த பெப்ரவரிக்குள் 23.5% இனால் அதிகரித்து 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டு கையிருப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2022 செப்டம்பரில் 94.9% ஆக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1% ஆகக் குறைந்துள்ளது.

அத்துடன், கடந்த 2022 செப்டம்பரில் 29,802 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 261% இனால் அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரிக்குள் 107,639 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

அத்துடன், பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இந்த அபிவிருத்திகள் அனைத்தும் சாத்தியமானதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.