காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் காவல் துறையினரால் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து காவல் துறை நிலையங்களுக்கும் உரித்துடைய வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட சில குற்றங்களை முன்னுரிமை அடிப்படையில் கையாள்வதற்கு தீர்மானித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய,
01. சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனத்தை செலுத்துதல்.
02. 18 வயதை குறைந்தவர்கள் வாகனத்தை செலுத்துதல்.
03. வாகன வருமானவரிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இன்று வானத்தை செலுத்துதல்.
04. வீதி விதிமுறைகளை மீறுதல்.
05. சுற்றுவட்டங்களுக்கு அருகில் இழைக்கும் தவறுகள்.
06. வீதி மாறுமிடத்தில் மேற்கொள்ளும் தவறுகள்.
07. ஒழுங்கைகள் மாறுமிடத்தில் இழைக்கும் தவறுகள்.
08. வீதி சமிக்ஞை விளக்குகள் தொடர்பான தவறுகள்.
09. பேரூந்து நிறுத்தும் நிலையங்களில் இழைக்கும் தவறுகள்.
10. தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்தல்.
11. பாதுகாப்பு தலைக்கவசமின்றி உந்துருளியை செலுத்துதல்.
ஆகிய குற்றங்களுக்கு முன்னுரிமையளித்து கண்காணிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.