பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயுடனான பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறில் 16 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கைது செய்ய கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி ஹந்தான பிரதேசத்தில் வசிக்கும் குழந்தை கடந்த புதன்கிழமை (15) பிற்பகல் கடத்தப்பட்டதாக தாயின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு 1.2 மில்லியன் லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தொழிலதிபரிடம் வழங்கிய காசோலைகள் நிராகரிக்கப்பட்டமை காரணமாக இக் கடத்தல் இடம்பெற்றதாக பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை இரவு வியாபாரி மாவனெல்லையில் இருந்து குழந்தையை பஸ்ஸில் வீட்டிற்கு செல்வதற்கு பணத்தை வழங்கி விடுவித்ததை அடுத்து குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
குழந்தைக்கு எந்தவிதமான உடல்ரீதியாகவோ அல்லது வேறு காயங்களோ ஏற்படவில்லை என்றும் எனினும் பலவந்தமாக கடத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)