குறைந்துவந்த தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குறைந்துவந்த தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம்!


கடந்த சில நாட்களாக கடுமையாக சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று (13) மீண்டும் அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த வியாழக்கிழமை (09) பதிவாகியிருந்த 134,000 ரூபாவாக இருந்த 22 கரட் தங்க நாணயத்தின் விலை இன்று 160,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, கடந்த வியாழக்கிழமை 145,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்க நாணயத்தின் விலையும் 173,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.


தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தற்காலிகமானது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.


"அமெரிக்க டொலர் விலை ரூ. 362ல் இருந்து ரூ. 307 ஆக முன்னேற்றம் அடைந்ததன் காரணமாக தங்கத்தின் விலை ரூ. 40,000 குறைந்தது. இது தங்கத்தின் விலையில் கடுமையான குறைப்பைக் காட்டியது, இது ஒரு தற்காலிக நிலைதான்," என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.