நாட்டில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த புது வேலைத்திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த புது வேலைத்திட்டம்!


புவியியல் தகவல் அமைப்பில் (GIS) பேருந்து பாதை வரைபடங்களை இணைத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட புதிய பரீட்சார்த்த திட்டமொன்றை இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) அறிவித்துள்ளது.


இந்த வேலைத்திட்டம் இலங்கை போக்குவரத்து சபைக்கு, பேருந்துகளின் பயணப் பாதைகள் மற்றும் கால அட்டவணைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் இடமளிக்கும். இதன் மூலம் இலங்கையின் பொது போக்குவரத்து சேவைகளின் தரமும் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பரீட்சார்த்த திட்டத்தின் மூலம், பேருந்து வழித்தட வரைபடங்கள் புவியியல் தகவல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை அதன் போக்குவரத்து வலையமைப்பை மிகவும் துல்லியமான மற்றும் விரிவான புரிதலைப் பெறுவதற்கு உதவுகிறது.


இது போக்குவரத்து நெரிசல் போன்ற சாத்தியமான பிரச்சினைகளை அடையாளம் காணவும், பேருந்து வழித்தடங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்கவும் போக்குவரத்து சபைக்கு உதவும்.


மேலும், இத்திட்டம் பயணிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து வழித்தடங்கள் மற்றும் அட்டவணைகள் பற்றிய 'பயனர் நட்பு' வரைபடத்தை வழங்குவதுடன், அவர்களின் பயணங்களைத் திட்டமிடுவதற்கும் திறமையாகப் பயணிப்பதற்கும் வசதியாக இருக்கும்.


பயண நேரத்தை குறைத்தல், பேருந்து அட்டவணையை மேம்படுத்துதல் மற்றும் இறுதியில் பொது போக்குவரத்து சேவைகளின் ஒட்டுமொத்த தரத்தை அதிகரிப்பதன் மூலம் பயணிகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த புதிய பரீட்சார்த்த திட்டத்தின் மாதிரி இலங்கை போக்குவரத்து சபையின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.