விசாரணைகளை மேற்கொள்ளச் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் உட்பட இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் நேற்று (19) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்கச் சென்ற காவல்துறையினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.