யூடியூப் பார்த்து குழந்தை பிரசவித்து கொலை செய்த 9ஆம் தர சிறுமி!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

யூடியூப் பார்த்து குழந்தை பிரசவித்து கொலை செய்த 9ஆம் தர சிறுமி!


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் யூடியூப் காணொளிகளை பார்த்து குழந்தையொன்றை பெற்றெடுத்து, பின்னர் அதனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாரென இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 09 ஆம் தரத்தில் கற்றுவரும் இந்த சிறுமிக்கு சமூகவலைத்தளம் மூலம் இளைஞர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.


பின்னர் இருவரும் நேரில் சந்தித்த சந்தர்ப்பமொன்றில், குறித்த இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.


அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதையறித்து அது குறித்து பெற்றோர் வினவியபோது, தனக்கு சில உடல்நல பிரச்சினைகள் இருப்பதாக கூறி அவர் சமாளித்துள்ளார்.


இந்நிலையில் வைத்தியசாலைகளுக்கு சென்றால் வீண் பிரச்சினைகள் ஏற்படுமென்று கருதிய சிறுமி, கடந்த 03ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த வேளையில், யூடியூப்பில் காணொளிகளை பார்த்து தாமாகவே குழந்தையை பிரசவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சிறிது நேரத்தில் குழந்தை அழுதுள்ள நிலையில், சத்தம் கேட்டால் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அந்த சிறுமி, இடைப்பட்டியினால் சிசுவின் கழுத்து நெரித்துக் கொலை செய்து உடலை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.


பணி முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் தாயார் வீட்டின் பல இடங்களில் இரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு சிறுமியிடம் விசாரித்தபோது, மாதவிடாய் காரணமாக இந்த இரத்தக்கறை ஏற்பட்டதாக கூறுயுள்ளார்.


எனினும், சந்தேகம் கொண்ட தாயார் தொடர்ந்தும் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை சிறுமி, தமது தாயிடம் கூறியுள்ளார்.


இந்நிலையில், தாயின் முறைப்பாட்டுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சிசுவின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதேவேளை, சிறுமியையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.


காவல்துறையின் பாதுகாப்புக்கு மத்தியில் சிறுமி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.