முஸ்லிம் கட்சி அரசியல்வாதிகளே உங்கள் நயவஞ்சக அரசியலுக்காக மார்க்கத்தை பயன்படுத்தாதீர்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் கட்சி அரசியல்வாதிகளே உங்கள் நயவஞ்சக அரசியலுக்காக மார்க்கத்தை பயன்படுத்தாதீர்கள்!!

( பேருவளை ஹில்மி)

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆரம்பகாலம் முதல் முஸ்லிம்களின் பங்களிப்பானது இன்றி அமையாதக இருந்து வந்துள்ளது.

ஆரம்ப காலம் முதல் இருந்து, முஸ்லிம் தனிக்கட்சி என்ற பிரிவுகள் இல்லாத போதும், பெரும்பான்மை சமூக மக்களோடு சேர்ந்து இரண்டகக் கலந்து

ஒற்றுமையான அரசியலில் மாறி மாறி பங்குகொண்டு வந்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட சதிகள் மூலம் வரலாறுகள் மறைக்கப்பட்ட போதிலும், இலங்கை மண்ணின் வரலாற்றிலும் இலங்கையின் சுதந்திர வரலாற்றிலும் இலங்கை அபிவிருத்தி வரலாற்றிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது.

அந்த வகையில் சமூகத்திற்காகவென அரசியல் செய்த நமது மூத்த அரசியல் தலைமைகள், தங்களது அரசியலுக்காக இறைவனையும் இஸ்லாத்தையும் ஒரு போதும் பயன்படுத்தியது கிடையாது. அவர்களின் அரசியல் கெளரவமான அரசியலாக முஸ்லிம் சமூகம் பெருமை படக்கூடிய அரசியலாகவே வரலாற்றில் இருந்து வந்துள்ளது.

அவர்களின் அரசியல், சமூகத்திற்கான அரசியலாக இருந்ததே தவிர, அவர்களுக்காக சமூக அரசியலை ஒரு போதும் பயன்படுத்தியது கிடையாது.

இலங்கை வரலாற்றில் இருந்த இரு பெரும்பான்மை கட்சிகளுடன் மாறி மாறி பங்கு கொண்டு சமூகத்திற்காக அரசியல் செய்தார்களே தவிர அவர்களின் தேவைக்காக சமூகத்தை பிரித்து, இன வாரியாக மத வாரியாக சமூகத்தை பயன்படுத்தியது கிடையாது.

இது போக, தங்களின் சொந்த பணத்தில் சம்பாதித்த சொத்துக்களையும் சமூக அரசியலுக்காக தரைவார்த்தர்களே தவிர, சமூகத்தை பயன்படுத்தி

எந்த சொத்துக்களையும் அவர்கள் ஈட்டவில்லை.

ஆனால் கடந்த மூன்று தசாப்த காலத்தினுள் முஸ்லிம் தனி கட்சிகள், முஸ்லிம் தனி உரிமை, முஸ்லிம் தனித்துவம் என்ற கோஷத்தின் கீழ் சந்திக்கு ஒரு கட்சியும், சந்துக்கு ஒரு கட்சியும், பொந்துக்கு ஒரு கட்சியுமாக சில முஸ்லிம் குள்ள நரிகள் முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்துப் பிழைக்க தலைப்பட்டனர்.

முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற பெய‌ரில், பதவிக்காகவும் பணத்திற்க்காகவும், கண்ட கண்டவர்கள் முஸ்லிம் தனியுரிமை என்ற பெயரில் உள் நுழைந்து சமூகத்தை விற்று சமூகத்தை ஏமாற்றி கேடான கோடிகளையும் பெற்று சமூக உரிமை வியாபாரிகளாக உரிமைகளை விற்று விழுங்கும் அரக்கர்களாக ஏப்பம் விட ஆரம்பித்தனர்.

இவர்கள் தனிக்கட்சிகள், தனி உரிமை, என கொக்கரிக்க ஆரம்பித்தது முதல், முஸ்லிம் உரிமைகளை பதவிக்காகவும் பணத்திற்காகவும் விற்றுப் பிழைத்ததே தவிர, இவர்களால் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த ஒரு உரிமையைக்கூட சுட்டிக் காட்ட முடியாத அளவிற்கு முஸ்லிம் சமூகம் இவர்களினால் எந்த அனுகூலங்களையும் அடைந்ததில்லை.

தனியுரிமையும் தனித்துவமும் பேசும் இவர்கள், தேர்தல்கள் வரும்போது அத்தனை தலைகளையும் ஏதாவது ஒரு பெரும்பான்மை கட்சியிடம் அடகு வைத்து,  தங்கள் இலட்சியங்களையும் பதவிகளையும் அடைந்துகொள்வதே இவர்களின் தனியுரிமை, தனித்துவமான அரசியலாகும். 

இறுதியில் பிழைப்புக்கு ஒரு வழியாகவும், பதவிகளையும், வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ளும் ஒரு உபய உத்தி வழிமுறையாக முஸ்லிம் சமூகம் உரிமை எனும் தலைப்பு மாறியுள்ளது.

பல்லின மக்கள் வாழும் இலங்கை சமூகத்தினுள் முஸ்லிம் சமூகம் எந்தவித படிப்பறிவும் இல்லாத கண்ட கண்ட சந்தர்ப்ப வாதிகளால் ஏமாற்றப்படும் ஏமாளிச் சமூகமாக அடையாளப்படுத்தும் அளவிற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் மாறியுள்ளனர்.

இவர்களின் அரசியலுக்காக இன்று எந்த விதமான அச்சமும் இன்றி, இறைவனையும் இஸ்லாத்தையும், சத்தியத்தையும் பயன்படுத்தும் அளவிற்கு தலைப்பட்டு விட்டனர்.

இலங்கை வரலாற்றில் மிகவும் படுமோசமாக முஸ்லிம் சமூகம் முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட ஒரு மிகக் கவலையான ஒரு நிகழ்வே 20ஆம் திருத்தச் சட்டமூலமாகும். 20 ஆம் திருத்த சட்ட மூலத்தில் இவர்களினால் முஸ்லிம் சமூகம் திட்டமிட்டு மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் மீது அபாண்டங்களை சுமத்தி, இனவாத தீயை மூட்டி உயிரற்ற கட்டையை எரித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட உலகில் எங்கும் நடைபெறாத ஒரு கொடூர நிகழ்வு நம் நாட்டில் அரங்கேறியது.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் கைக்கொண்ட ஏமாற்று வழிகள் என்ன என்பதை கடந்த காலங்களில் நாம் கண்டோம்.

20 வது சட்டமூலத்தில் தலைவர் எதிராகவும் உறுப்பினர்கள் சாதகமாகவும் வாக்களிக்க முடிவு செய்யப்பட்டதை சக உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அவர்கள் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

மேலும் , அனைத்து விடயங்களும் தலைவரின் ஆலோசனையின் பிரகாரமே நடந்தது. தலைவரின் ஆலோசனைப்படியே நாம் ஆதரவாக வாக்களித்தோம் என பிரதித் தலைவர் ஹரிஸ் அவர்கள் வெளியரங்கில் பகிரங்கமாக தெரிவித்த விவகாரங்கள் இன்றும் வலைத்தளங்களில் கொட்டி கிடக்கின்றது.

மேலும் கேவலமான உலக பதவிக்காக ஜனாஸாக்களை எரிக்கவில்லை பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டது என உலகம் சாட்சியாக சற்றும் அச்சமற்றவர்களாக பொய் கூறிய அசிங்கம் மக்கள் நினைவை வி்ட்டு அகலவில்லை.

இதற்கு மத்தியில் ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிய விதம் மிக மிக கொடூரமானது.

இதே நிலையில் இவ்வளவு தூரம் நாடகங்களை ஆடிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் மக்களிடம் முஸ்லிம் சமூகத்தை காட்டி வாக்கு கேட்பது வெட்கக்கேடானதாகும்.

இதையும் மீறும் விதமாக அத்தனை நாடகங்களும் நிறைவு பெற்று மீண்டும் அதே பதவிக்களுக்கு குறிப்பிட்ட அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் பயங்கரமான இனவாதம் பேசி சில கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேவேலை, அவர்களின் சூடான இனவாதத்தை அரசியல் மேடைகளில் தலைப்புகளாக எடுத்து , அவர்களின் இனவாதத்தை காரணங்காட்டி மக்கள் வாக்குகளை பெற்று இவர்கள் பயனடைந்தனர்.

இறுதியில் இனவாத கட்சிகளுடன் இனைந்து ரகசிய ஒப்பநாதங்களை செய்து இவாதிகளின் திட்டங்களுக்கு ஆதரவளித்தனர்.

மொத்தத்தில் இனவாத தீயில் எரிந்து ஏமாந்து போனது முஸ்லிம் சமூகமே தவிர அரசியல்வாதிகள் அல்ல.

இது முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட படுமோசமான துரோகமும் பகல் கொள்ளையுமாகும்.

மறுபுறத்தில் "மொட்டு ஹராம். ஹராத்தின் பக்கம் நெருங்கவும் கூடாது" என முஸ்லிம் மக்களை ஏமாற்றியவர்கள் அதே ஹாரத்தில் வீழ்ந்து கிடப்பதில் இருந்து இவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமூகம் இனியாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இவை அத்தனையும் மீறும் விதமாக சமூக வலைத்தளங்களில் அண்மையில் உலா வந்த ஒரு கேவலமான காணொளியை காண முடிந்தது.

தாய் வீட்டில் இருந்து பிரிந்து சென்ற ஹிஸ்புல்லாஹ் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்த சமாச்சாரமும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.

இது அவர்களது அரசியல், அவர்களது அரசியல் உரிமை. நினைத்தவருக்கு நினைத்த நேரத்தில் நினைத்த கட்சியை ஆதரிக்கலாம், அல்லது விட்டு விலகலாம் அதில் முஸ்லிம் சமூகத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இதற்காக இறைவனும் இஸ்லாமும் பயன்படுத்தப்படுவது கவலையான விடயமாகும். இது தடுக்கப்பட வேண்டும்.

இந்த காணொளியில் பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் அவர்களை முன்னை நாள் அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களை மிக மோசமாக , திட்டுவதும், ஹிஸ்புல்லா அவர்கள் ரவுப் ஹகீம் அவர்களை பைத்திய காரன் மிக மோசமாக திட்டுவதையும் அவதானிக்க முடிந்தது.

இது அவர்களின் நயவஞ்சக அரசியலை பொறுத்தவரையில் சகஜமாக இருக்கலாம்.

மேலும் இது சம்பந்தமான காணொளிகளில் "இன்ஷா அல்லாஹ்" "மாஷா அல்லாஹ்" போன்ற தூய்மையான வசனங்கள் பலமுறை உச்சரிக்கப்பட்டன.

இதையும் மீறும் விதமாக அத்தனை நாடகங்களும் நிறைவு பெற்று மீண்டும் அதே பதவிக்களுக்கு குறிப்பிட்ட அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் இதுசம்பந்தமான காணெளியில் அரசிலில் இது சகஜம் எனவும் அவர்கள் இல்லாது அரசியல் செய்ய முடியாது என குறிப்பிட்தையும் அவதானிக்க முடிந்தது.

அவ்வாறாயின் காலத்திற்கு காலம் மாறி மாறி வேஷம் போட்டு சமூகத்த ஏமாற்றுவது தானா இவர்களது தனியுரிமை அரசியல்.

ஒரு முஸ்லிம் என்றால் அவன் ஒரு வித்தியாசமான பண்புகள் உள்ளவன். வார்த்தைகளில், வாக்குறுதிகளில் அழகானவன் என உலகம் கொடுத்த சான்றிதழ். அதிலும் இது ஒரு தனி இனத்தை முஸ்லிம் சமூகத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரு அரசியல் கட்சி.

ஒரு முஸ்லிமின் சகல வாழ்கையும் மார்க்க வரம்புகளால் மட்டுப்படுதப்பட்டுள்ளது.

அதை மீறி முஸ்லிமான நிலையில் ஒருவன் செயல்பட முடியாது. இதற்கு துனையாக உயர்வான இறைவனையும் தூய மார்க்கத்தையும் பயண்படுத்த முடியாது.

வாழ்ந்தோர் வழியில் நல் வாசம் வீசும் ஒரு அழகான வழியினை பின்பற்றும் ஒரு சமூகமாக நாம் இன் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
முஸ்லிம் என்பவன் இவ்வாறு தான் வாழ வேண்டும் என்ற வரையறைக்குட்பட்டவன்.

வித்தியாசமான வாகாகுறுதிகளையும், அதை மீறுபவர்களையும் வித்தியாசமான கோணத்தில் அடையாளப்படுத்தும் தூய மார்கத்தில் நாம் உள்ளோம்.
எனவே இவர்களின் சொந்த இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட, கேவலமான உலக அரசியலுக்கு அல்லாஹ்வின் பெயரும், அவனது தூய மார்க்கமும் உச்சரிக்கப்படுவதை, முன்னிறுத்தப்படுவதை இவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மோசமான அரசியல் இலங்கையில்  ல்மாத்திரமே உள்ளது தவிர, உலகில் எந்த முஸ்லிம் நாடுகளில், அல்லது அங்குள்ள முஸ்லிம் வேற்பாளர்களால் தேர்தல்களுக்கு இறைவனும் அவனுடைய பெயரும் அவனது தூய மார்கமும் சத்தியமும் பயண்படுத்தப்படுவது கிடையாது.

எனவே முஸ்லிம் சமூகத்திற்கு இவர்கள் சேவை செய்வதும் முஸ்லிம் உரிமைகளை பாதுகாப்பதும் வானில் வரையும் ஓவியங்களாகவும் நீரில் வரையும் காவியங்களாகவும் நாம் கற்பனைகளில் தான்  அனுபவிக்க வேண்டியுள்ளது.

எனவே நம் நாட்டில் இதற்கு மேலும் அல்லாஹ்வின் பெயரையும் அவனது தூய மார்கத்தையும் காட்டி, திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் அரசியல் வாதிகளை இனங்கண்டு அவ்வாறான அரசியல் வாதிகளிடமிருந்து இஸ்லாத்தையும் மார்கத்தையும் பாதுகாப்போம்.

( பேருவளை ஹில்மி)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.