முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் காலமானார்!


பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் (79) காலமானார்.


அவரது குடும்பத்தினர் இதனை உறுதிப்படுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


பர்வேஸ் முஷாரப் 1943 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இந்தியாவின் டெல்லியில் பிறந்தார்.


அவர் ஏப்ரல் 19, 1961 இல் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்டதுடன், பாகிஸ்தானின் இராணுவ படைகளின் பிரதானியாகவும் பொறுப்பேற்றார்.


1999 இல் இரத்தமில்லாத சதி மூலம், நவாஸ் ஷெரீப்பை வீழ்த்திய, பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். பின்னர் அவர் 2001 ஜூனில் ஜனாதிபதியாக பதவியேற்றார்.


அவர் 2008 ஆம் ஆண்டு பதவி விலகிய நிலையில் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவியேற்றார்.


இந்த நிலையில்,  நீண்டநாள் சுகயீனமுற்றிருந்த முஷாரஃப்  துபாயில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (05) காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.