மின்சாரக் கட்டணத்தை 66% அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த பிரேரணைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க ஆட்சேபனை தெரிவித்ததாகவும், ஏனைய மூன்று உறுப்பினர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்திருந்தமையினால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி அனைத்து தரப்பினரின் பொது ஆலோசனைகள் மற்றும் ஆலோசனைகளின்படி 142 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டுவதற்காக 36% மின்சார கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தயார் செய்துள்ளதாகவும் ஆனால் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மாத்திரமே இதற்கு ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கை மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை 66% ஆல் உயர்த்துவதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு ஏனைய உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)