ஒரு பக்கம் வெள்ளம்.. மறுபக்கம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..நியூசிலாந்து மக்கள் அச்சம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு பக்கம் வெள்ளம்.. மறுபக்கம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..நியூசிலாந்து மக்கள் அச்சம்!

கேப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை சந்தித்த நிலையில் நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

வெலிங்டன்: நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து நாட்டின் லோயர் ஹட் பகுதியில் இருந்து 78 கி.மீ தொலைவில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடுகள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். கேப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை சந்தித்த நிலையில் நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பராபரமுவில் இருந்து வடமேற்கே 50 கிமீ தொலைவில் 57.4 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இரவு 7.38 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த 15 நிமிடங்களில் சுமார் 31 ஆயிரம் பேர் பாதுகாப்பு கருதி திறந்தவெளிகளுக்கு வந்துவிட்டனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.

இதுவரை பொதுமக்கள் யாரும் உயிரிழந்ததாக செய்திகள் இல்லை.




பராபரமு, லெவின், பொரிருவா, பிரெஞ்ச் பாஸ், அப்பர் ஹட், லோயர் ஹட், வெலிங்டன், வாங்கனுய், வேவர்லி, பால்மர்ஸ்டன் நார்த், ஃபீல்டிங், பிக்டன், எகெடஹுனா, மாஸ்டர்டன், மார்ட்டின்பரோ, ஹன்டர்வில்லே, ஹவேரா, ப்ளென்ஹெய்ம், செடான், நெல்கென், நெல்கென், பொங்கரோவா, ஸ்ட்ராட்ஃபோர்ட், ஓபுனேக், தைஹாபே, காசில்பாயிண்ட், மோட்யூகா, ஒஹாகுனே மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இந்த அதிர்ச்சி உணரப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். பல ஆயிரம் பேர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.