
ஹல்கஹகும்புர பிரதேசத்தில் நேற்று (13) இரவு 25 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இராணுவ வீரர்கள் இருவர் சந்தேகநபர் ஒருவரை பிடிக்கச் சென்ற போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாகவே குறித்த பெண் சுடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர், துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன், அங்கு அவர் உயிரிழந்தார். (யாழ் நியூஸ்)