
127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக சமரி அத்தபத்து 15 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் நிலக்ஷி டி சில்வா ஆகியோர் 79 பந்துகளில் 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
ஹர்ஷிதா 50 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தார். நிலாக்ஷி ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் (38) எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் குழு ஏ இல் முன்னேறியது. (யாழ் நியூஸ்)