
துபாய்க்கு தொழில்வாய்ப்புக்காக இலங்கை பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை எதிர்வரும் 05ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எமிரேட்ஸில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசா மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து டுபாய்க்கு தொழிலாளர்களை அனுப்பும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.