சர்ச்சைக்குரிய போலி தலதா மாளிகை இடிக்கப்பட்டு வருகிறது!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

சர்ச்சைக்குரிய போலி தலதா மாளிகை இடிக்கப்பட்டு வருகிறது!


குருநாகல் - பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் பத்திருப்பு தற்போது இடித்து அழிக்கப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது.


முன்னதாக குருநாகல், பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகை கட்டப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த கடிதத்தில் பௌத்த உயர்பீடம் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே ஆகியோர் கையொப்பமிட்டனர்.


உலகளாவிய பௌத்தர்களை ஏமாற்றி, பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஜனக சேனாதிபதி என்ற ஒருவரால் போலியான 'தலதா மாளிகை' கட்டப்பட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன், தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் சேபால் அமரசிங்க என்ற மற்றொருவரால் வெளியிடப்பட்ட கருத்து பௌத்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.


இதனையடுத்து, ஜனக சேனாதிபதி மற்றும் சேபால அமரசிங்கவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறைமா அதிபர் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்தார்.


அதன்படி, விசாரணைகளை முன்னெடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சேபால் அமரசிங்கவை கைதுசெய்து நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று குறித்த பகுதி சென்றிருந்தார்.


அதன்போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட கட்டடத்தின் வடிவத்தை மாற்றியமைக்க அதன் ஸ்தாபகரான ஜனக சேனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.


அத்துடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்றும் நேற்று குறித்த பகுதிக்கு சென்றதுடன், தொல்பொருட்கள் சட்டத்தின் பிரகாரம் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.