
208 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை தொடர்பான விவரங்களை இப்போது ஆன்லைனில் விடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் தங்களது கல்வி மற்றும் தொழில் தகுதிகளை நாடாளுமன்ற செயலகத்தில் அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகவல்களை நாடாளுமன்ற செயலகத்திடம் ஒப்படைக்கவில்லை என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
தகவல் அறியும் உரிமை ஆணையம் (RTIC) பிறப்பித்த உத்தரவின்படி இந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை www.parliament.lk என்ற பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்நுழைந்து, அந்த தளத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் அடைவு வகையை அணுகுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இணைப்பு: https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/?cletter=A