
பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரானின் பிணையாளர்கள் 03 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
உலகக்குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரான் என்ற மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானை கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதித்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், வெளிநாடு செல்ல தடையும் விதித்தது.
2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அவர் மாறுவேடமிட்டு சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பிச்சென்றதாக இந்திய புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அவருக்கான பிணை நின்ற 3 பிணையாளர்கள் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக அந்த நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.